உள்ளடக்கத்துக்குச் செல்

இரே, ஈரான்

ஆள்கூறுகள்: 35°35′N 51°26′E / 35.583°N 51.433°E / 35.583; 51.433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரே
ری
தெகுரானின் மாவட்டம்
Tughrul Tower
Shah Abdol-Azim Shrine
Rey Castle
Bahram fire temple
Rashkan Castle
Bibi Shahr Banu Shrine
இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்: Tughrul Tower, Shah Abdol-Azim Shrine, இரே கோட்டை, பஃரம் தீக்கோயில், இரசுகன் கோட்டை, Bibi Shahr Banu Shrine.
இரே is located in ஈரான்
இரே
இரே
ஆள்கூறுகள்: 35°35′N 51°26′E / 35.583°N 51.433°E / 35.583; 51.433
நாடு ஈரான்
மாகாணம்தெகுரான் மாகாணம்
மண்டலம்இரே மண்டலம், தெகுரான் மண்டலம்
பரப்பளவு
 • மொத்தம்2,996 km2 (1,157 sq mi)
ஏற்றம்
1,180 m (3,870 ft)
மக்கள்தொகை
 (1996)
 • மொத்தம்2,50,000
 • அடர்த்தி83/km2 (220/sq mi)
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)
இடக் குறியீடு021
இணையதளம்www.tehran.ir

இரே (Shahr-e Rey, பாரசீக மொழி: شهر ری‎, "City of Ray" அல்லது Ray, Rayy, Rhay (Rey; ری) என்பது ஈரானின் தெகுரான் மாகாணத்தில் இருக்கும் 14 மண்டலங்களில் ஒன்றாக இருக்கும், இரே மண்டலத்தின் தலைநகரம் ஆகும் . முன்னர் ஒரு தனித்துவமான நகரமாக இருந்த இது, இந்நாட்டின் தலைநகரான இருக்கும் பெருநகரான கிரேட்டர் தெகுரானின் 20 வது மாவட்டமாக உள்வாங்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்

[தொகு]

வரலாற்று அடிப்படையில் பல சொற்களால் (இராகேஸ், இராகே, அர்சாசியா) அழைக்கப்படுகிறது. இரே தெகுரான் மாகாணத்தில் இருக்கும் நகரங்களிலேயே பழமையான நகரமாகும். கிளாசிக்கல் சகாப்தத்தில், இது ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. மீடியாப் பேரரசு காலத்தில் ஊடகம், அரசியல், கலாச்சார ஆகிய அடிப்படைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.[1] பண்டைய பாரசீக கல்வெட்டுகள் மற்றும் அவெஸ்டா ( ஜோராஸ்ட்ரிய வேதங்கள்) ஆகியவையும், கிடைத்துள்ள பிற ஆதாரங்களும், பண்டைய இரேயின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்களின் இடைக்கால படையெடுப்புகளின் போது இரே அழிவுக்கு ஆளானது. ஆனால் அதன் முக்கியத்துவம், துருக்கியர்களின் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக புயிட் டேலாமைட்டுகள் மற்றும் செல்யூக் பேரரசு காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான், இந்த பழைய நகரத்தில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது, மேலும் பல கண்டுபிடிப்புகளில், வர்த்தகம் செய்யப்பட்டதற்கான சுவடுகள் எடுக்கப்பட்டன. 1997 ஆம் ஆண்டில் ஈரானிய கலாச்சார பாரம்பரிய அமைச்சகம்மும், பிராட்போர்டு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் அறிவியல் துறையும், தெகுரான் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையும் இணைந்து, கூட்டு முயற்சியோடு , ஆழாமான அகழ்வாராய்ச்சி நடத்தப் பட்டது. புனரமைக்கப்பட்ட மீடியன் கால ரே கோட்டை, பார்த்தியன் காலத்து ரஷ்கன் கோட்டை, பகராமின் சாசானிய கால ஜோராஸ்ட்ரியன் தீ கோயில், ஒரு காலத்தில் ஜோராஸ்ட்ரியன் மற்றும் இப்போது இஸ்லாமிய ஆலயமான பிபி ஷாஹர்-பானு ஆகியவைகளும், இரே நகரில் உள்ள தொல்பொருள் தளங்களில் அடங்குகின்றன.

வரலாறு

[தொகு]

கிமு 6,000 இல், மத்திய பீடபூமி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக, இங்கு குடியமர்வுகள் தொடங்கின. இது மீடியன் மாவட்ட கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குடியமர்வு மூலம், பார்த்தியப் பேரரசு இராகா அழைக்கப்படும் ஒரு தலைநகரமாக விளங்கியது. கிளாசிக்கல் கிரேக்க-ரோமன் புவியியலில், இது லத்தீன் மற்றும் இராகாய் மொழிகளில் ராகே அல்லது ராகனே என பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரேக்க மொழில் உள்ள ராகேஸ்(கிரேக்கம்) இது அபோக்ரிபாவில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது.[2] முன் மீடியன் காலத்திற்கு முன், இதன் காலம் உள்ளது. சில வரலாற்றாசிரியர்கள் அதன் கட்டிடங்களுக்கு, பண்டைய புராண மன்னர்களே காரணம் என்று கூறுகின்றனர். மேலும் சிலர் ஜோராஸ்ட்ரியன் தலைவரின் வம்சத்தின் முயற்சிகளே இதற்கு காரணம் என்று நம்புகிறார்கள். செல்ஜுக் மன்னர் துருல் பேக்கை நினைவுகூரும் 12 ஆம் நூற்றாண்டின் நினைவுச்சின்னமான துக்ருல் டவர், இன்றும் நிலவும் வரலாற்று கட்டமைப்புகளில் ஒன்றாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில், இந்நகரமானது, அழிவு நகரமாக வருணிக்கப் பட்டது. சா-அப்துல்-ஆலயம் மட்டுமே இருந்தது.[3]

காட்சியகம்

[தொகு]
இரசகன் மலையிலிருந்து இரே நகரும், பிபி-ஷாஹர்-பானோ மலையும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Erdösy, George. (1995). The Indo-Aryans of ancient South Asia: Language, material culture and ethnicity. Walter de Gruyter. p. 165. Possible western place names are the following: Raya-, which is also the ancient name of Median Raga in the Achaemenid inscriptions (Darius, Bisotun 2.13: a land in Media called Raga) and modern Rey south of Tehran
  2. Judith 1:5, 15; Tobit 1:14, 5:5, 6:10
  3. Heinrich Brugsch: Reise der Königlich preussischen Gesandtschaft nach Persien 1860 und 1861, Leipzig 1862 , Volume 1, pp 230ff

ஆதாரங்கள்

[தொகு]
  • Kosmin (2013). The Oxford Handbook of Ancient Iran. Oxford University Press.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரே,_ஈரான்&oldid=3792714" இலிருந்து மீள்விக்கப்பட்டது